சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடு மேய்த்த பெண்ணுக்கு சாலையோரம் சுகப்பிரசவம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
செஞ்சி-செஞ்சியில், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் உதவியுடன், ஆடு மேய்க்கும் பெண்ணுக்கு சாலையோரம் சுகப்பிரசவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, முல்லை நகர் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாபு மனைவி குமாரி, 30; நிறை மாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை 11:00 மணியளவில் செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் ஆடு மேய்த்துக்

செஞ்சி-செஞ்சியில், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் உதவியுடன், ஆடு மேய்க்கும் பெண்ணுக்கு சாலையோரம் சுகப்பிரசவம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, முல்லை நகர் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாபு மனைவி குமாரி, 30; நிறை மாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை 11:00 மணியளவில் செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், சாலையோரம் படுத்துக் கொண்டு வலியால் அவதிப்பட்டார்.அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அய்யனார், டிரைவர் செல்வமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.வலியால் துடித்த குமாரிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அதே இடத்தில், அய்யனாரும், செல்வமணியும் பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.பின்னர் குமாரி மற்றும் குழந்தையையும் ஆம்புலன்சில் ஏற்றி செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சமயோசிதமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X