சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் 5 சவரன் நகை திருட்டு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே மூதாட்டியிடம் 5 சவரன் செயினை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த கோ.தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுபிள்ளை மனைவி இருசம்மாள், 70; இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, பைக்கில் வந்த நபர், உங்கள் கணவருக்கு தரவேண்டிய வட்டி பணம் 1,000 ரூபாய் என

அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே மூதாட்டியிடம் 5 சவரன் செயினை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த கோ.தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுபிள்ளை மனைவி இருசம்மாள், 70; இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, பைக்கில் வந்த நபர், உங்கள் கணவருக்கு தரவேண்டிய வட்டி பணம் 1,000 ரூபாய் என கொடுத்துள்ளார். பின்னர், இருசம்மாளிடம் பேச்சுக் கொடுத்து, உங்கள் செயினை பத்திரமாக கழற்றி வைத்துக் கொள்ளுங்கள். யாராவது அறுத்துச் சென்று விடுவார்கள் என கூறியுள்ளார். அதனை நம்பிய இருசம்மாள், தனது செயினைக் கழற்றி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தார். அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் செயின் இருந்த டப்பாவுடன் தப்பிச் சென்றார்.இருசம்மாள் அளித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X