பொது செய்தி

தமிழ்நாடு

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
அவனியாபுரம் : நீதிமன்ற உத்தரவின்படி மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: டில்லி பல்கலை பாடத்திட்டத்திலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள்

அவனியாபுரம் : நீதிமன்ற உத்தரவின்படி மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: டில்லி பல்கலை பாடத்திட்டத்திலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே பாடத்திட்டங்களில் இடம்பெற்றிருந்த ஒன்றை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் படைப்புகளின் முக்கியத்துவம் கருதி தான் பாடங்களில் சேர்க்கப்படும்..படைப்புகளை பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மீண்டும் அதை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழக அரசு கல்வெட்டுகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றை தமிழகத்திற்கு கொண்டுவந்து முறையாக பாதுகாத்து, அதை முழுமையாக அறிந்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடும். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X