சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் இடித்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரத்தில் வீரனார் கோவில் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில், சப்கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரில் நந்தனார் அரசு பெண்கள் பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள வீரனார் கோவிலை கடந்த 17 ம் தேதி பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து

சிதம்பரம்-சிதம்பரத்தில் வீரனார் கோவில் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில், சப்கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரில் நந்தனார் அரசு பெண்கள் பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள வீரனார் கோவிலை கடந்த 17 ம் தேதி பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருகிலுள்ள மவுன குரு சாமிகள் மடத்தின் மடாதிபதி சுந்தரமூர்த்தி சுவாமிகள், கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். சிதம்பரம் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் நேற்று வீரனார் கோவில் இடித்ததை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் கோவில் கட்டி தர வலியுறுத்தியும், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பின், சப் கலெக்டர் மதுபாலனிடம் அகற்றப்பட்ட கோவிலை மீண்டும் கட்டி தரக்கோரி மனு அளித்தனர். டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X