பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தடியில் வகுப்பு; மதிய உணவு: மாணவர்கள் மனம் கவரும் ஆசிரியர்கள்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை : கொரோனா பாதிப்பால் முழுமையாக மீள முடியாமல் தவிக்கிறது கல்வித்துறை. ஒன்றரையாண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.'கொரோனா பேரிடர்' என்ற பெயரில் கற்பித்தலுக்கு இயற்கை கடிவாளம் போட்டாலும், அதையும் தாண்டி அர்ப்பணிப்பு ஆசிரியர்கள் மாணவர்கள் வசிக்கும் வீடுகள், தெருக்களுக்கு சென்று பல மாவட்டங்களில் பாடம்
மரத்தடி, வகுப்பு, மதியஉணவு, மாணவர்கள், ஆசிரியர்கள்

மதுரை : கொரோனா பாதிப்பால் முழுமையாக மீள முடியாமல் தவிக்கிறது கல்வித்துறை. ஒன்றரையாண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

'கொரோனா பேரிடர்' என்ற பெயரில் கற்பித்தலுக்கு இயற்கை கடிவாளம் போட்டாலும், அதையும் தாண்டி அர்ப்பணிப்பு ஆசிரியர்கள் மாணவர்கள் வசிக்கும் வீடுகள், தெருக்களுக்கு சென்று பல மாவட்டங்களில் பாடம் நடத்துகின்றனர்.மதுரை திருஞானம் துவக்க பள்ளி ஆசிரியர்கள் 'வீதி வகுப்பறை' திட்டம் துவங்கி மதிய உணவும் வழங்கி அசத்துகின்றனர். பனையூர், அனுப்பானடி, சிந்தாமணி, கல்மேடு பகுதிகளுக்கு இப்பள்ளியின் 10 ஆசிரியர்கள் குழுவாக சென்று மரத்தடி மற்றும் வீடுகளில் அப்பகுதி மாணவர்களுக்கு பாடம் நடத்துக்கின்றனர்.அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

தலைமையாசிரியர் சரவணன் கூறியதாவது: வீட்டில் முடங்கியுள்ள 1-முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி பாடம் நடத்துகிறோம். மதிய உணவு வழங்கும் திட்டம் துவங்கி, வாரம் ஒரு நாள் ஆசிரியர்களும், பிற நாட்களில் 'ஸ்பான்சர்' மூலம் உணவு வழங்குகிறோம். மாணவர்களுக்கு உணவு அல்லது நிதியுதவி செய்ய விரும்புவோர் முன்வரலாம் என்றார்.

தொடர்புக்கு 93441 24572


மனம் திறந்து உதவலாம்


சார்ஜாவில் வசிக்கும் மதுரை ஜாஸ்மின் மூன்று நாட்களுக்கு மதிய உணவுக்கு உதவியுள்ளார். அவர் கூறியதாவது: சார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மூலம் 10 ஆண்டுகளாக பசுமை, பெண் தொழிலாளர் பாதுகாப்பு, குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆண்டுக்கு ஒருமுறை மதுரை வந்து முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்வேன். இந்தாண்டு மாணவர்களுக்கு சாப்பாடும், எச்.ஐ.வி., பாதித்த மாணவர்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சென்று ஒருமாத தேவையான பொருட்கள் வழங்கினேன். வசதி உள்ளோர் மனம் திறந்து உதவி செய்தால் ஆதரவற்றோர் இருக்க மாட்டார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X