பொது செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வரும் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புறவழிச் சாலையிலிருந்து உளுந்துார்பேட்டை செங்குறிச்சி வரை 73.9 கி.மீ., துாரத்திற்கு விக்கிரவாண்டியில் உள்ள உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிட்டெட், பராமரிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது.இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்)

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வரும் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புறவழிச் சாலையிலிருந்து உளுந்துார்பேட்டை செங்குறிச்சி வரை 73.9 கி.மீ., துாரத்திற்கு விக்கிரவாண்டியில் உள்ள உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிட்டெட், பராமரிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது.இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஆண்டுதோறும் செப்டம்பர் 1ம் கட்டண உயர்வை அறிவிக்கும்.இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வு விபரம் (பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள்):கார், ஜீப், பயணிகள் வேன் ஒரு முறை பயணிக்க புதிய கட்டணம் 90 ரூபாய் (80), பலமுறை பயணிக்க 135 (125), மாதாந்திர கட்டணம் 2,660 (2465).இலகு ரக வணிக வாகனத்திற்கு ஒரு முறை பயணிக்க 155 (145), பலமுறை பயணிக்க 235 (215) மாதாந்திர கட்டணம் 4,650 (4,310).டிரக், பஸ் ஒரு முறை பயணிக்க 310 (285), பலமுறை பயணிக்க 465 (430) மாதாந்திர கட்டணம் 9,305 (8,625).பல அச்சு வாகனம் ஒரு முறை பயணிக்க 500 (460), பலமுறை பயணிக்க 750 (695), மாதாந்திர கட்டணம் 14,950 (13,860).பள்ளி பேருந்துகளுக்கு கட்டணத்தில் மாற்றமின்றி மாதாந்திர கட்டணமாக 1,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போன்று உள்ளூர் வாகன கட்டணத்தில் எவ்வித மாற்றமின்றி வகை ஒன்று 150 ரூபாய், வகை இரண்டு 300 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கட்டண உயர்வு இன்றி, 2019ம் ஆண்டு கட்டண முறையே 2020ம் ஆண்டிலும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X