சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.4.16 லட்சம் மோசடி நிதி நிறுவன ஊழியர் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கடலுார்-தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 4 லட்சத்து 16 ஆயிரம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, ஆயிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 32; இவர், சிதம்பரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி பெற்றுக் கொடுத்து, தவணை முறையில் கடனை வசூல் செய்யும் பணியை செய்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு செப்., 13ம் தேதிக்கு

கடலுார்-தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 4 லட்சத்து 16 ஆயிரம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, ஆயிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 32; இவர், சிதம்பரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி பெற்றுக் கொடுத்து, தவணை முறையில் கடனை வசூல் செய்யும் பணியை செய்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு செப்., 13ம் தேதிக்கு முன்பும், அதற்கு பின்பும் சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 40 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 200க்கும் மேற்பட்டோரிடம் கடன் தொகை ரூ. 5 லட்சத்து 1074 வசூலித்தார். ஆனால், அதனை நிறுவனத்தில் ஒப்படைக்கவில்லை.பணத்தை அவரிடம் கேட்ட போது, ரூ. 85 ஆயிரம் மட்டுமே திருப்பி ஒப்படைத்தார். மீதமுள்ள ரூ. 4 லட்சத்து 16 ஆயிரத்து 74 மோசடி செய்து தப்பினார். இது குறித்து நிறுவன மேலாளர் தினேஷ் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த சரண்ராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X