போலீஸ் செய்திகள்..

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தவறி விழுந்த டிரைவர் பலிசோழவந்தான்: இரும்பாடி அருள்பாண்டி 31, மணல் அள்ளும் இயந்திர டிரைவராக பணிபுரிந்தார். ஆக., 24 வீட்டின் மாடிப்படிக்கட்டில் தவறி விழுந்து படுகாயமுற்று, மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவர் மாயம்வாடிப்பட்டி: மதுரை நாகமலை புதுக்கோட்டை ஆசைகிளி 43, ஆட்டோ டிரைவர். ஆக., 25ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு

தவறி விழுந்த டிரைவர் பலி
சோழவந்தான்: இரும்பாடி அருள்பாண்டி 31, மணல் அள்ளும் இயந்திர டிரைவராக பணிபுரிந்தார். ஆக., 24 வீட்டின் மாடிப்படிக்கட்டில் தவறி விழுந்து படுகாயமுற்று, மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆட்டோ டிரைவர் மாயம்
வாடிப்பட்டி: மதுரை நாகமலை புதுக்கோட்டை ஆசைகிளி 43, ஆட்டோ டிரைவர். ஆக., 25ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடு திருடியவர் கைது

விக்கிரமங்கலம்: நடுமுதலைக்குளம் கருப்பையா 50, அங்குள்ள கருப்புசுவாமி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடு மற்றும் ரூ.500 ஐ திருடினார். கோயில் தக்கார் இளமதி புகாரில் கருப்பையாவை போலீசார் கைது செய்தனர்.

டூவீலர் மோதி மூதாட்டி பலி
திருமங்கலம்: பேரையூர் குமாரபுரம் அமிர்தலட்சுமி 73. பூ வியாபாரியான இவர் ஆக., 26 பூ வாங்க திருமங்கலம் சென்றார். தியேட்டர் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது வலையபட்டி மணிகண்டன் 29, ஓட்டிய டூவீலர் மோதியது. காயமுற்ற அமிர்தலட்சுமி மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை, பணம் திருட்டு
சிந்துபட்டி: பொக்கம்பட்டி விவசாயி பாண்டி. மனைவி ஜோதிலட்சுமி 55. நேற்று முன் தினம் தோட்டத்தில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் திருடு போயிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆற்றில் மூழ்கி பலி
மதுரை: வண்டியூர் முத்துராமலிங்கம் 50. நேற்றுமுன்தினம் விரகனுார் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர் மாயமானார். போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வண்டியூர் வைகையாற்றில் உடல் மீட்கப்பட்டது.
அரசு பஸ் மோதி பலி
மதுரை: மதிச்சியம் அம்பலம் 59. நேற்றுமுன்தினம் மாலை முனிச்சாலை பகுதியில் டிரைசைக்கிள் ஓட்டி வந்தபோது அரசு பஸ் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகனம் மோதி சாமியார் பலி
உசிலம்பட்டி: திண்டுக்கல் ராஜதானி கோட்டை ராஜபெருமாள் 46. பாத்திர வியாபாரம் செய்து வந்த இவர் சில ஆண்டுகளாக வீட்டிலிருந்து வெளியேறி சாமியாராக திரிந்தார். உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் அருகே நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
தாய் கொலை: மகன் கைது
மதுரை: செல்லுார் கருப்பசாமி 37. நேற்று காலை ஊனமுற்ற தாயார் முத்துகருப்பியிடம் 65, பணம் கேட்டு தகராறு செய்தார். தரமறுத்தவரை கட்டையால் தாக்கினார். அதில் இருந்த ஆணி, முத்துகருப்பி தலையில் குத்தி, மூளையை பாதித்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று மாலை இறந்தார். கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X