ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 1.10 லட்சம் மோசடி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி, இளம்பெண்ணிடம் 1.10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, தேங்காய்திட்டு, புருஷோத்தமன் நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் நிவேதா 23. கடந்தாண்டு இவரது தந்தை இறந்ததைதொடர்ந்து, பல இடங்களில் வேலை தேடிய இவர், போக்கியத்திற்கு வீடும் தேடி வந்தார்.அப்போது தோழிகள் மூலம் மூலக்குளம் ஜெ.ஜெ.,

புதுச்சேரி-ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி, இளம்பெண்ணிடம் 1.10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, தேங்காய்திட்டு, புருஷோத்தமன் நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் நிவேதா 23. கடந்தாண்டு இவரது தந்தை இறந்ததைதொடர்ந்து, பல இடங்களில் வேலை தேடிய இவர், போக்கியத்திற்கு வீடும் தேடி வந்தார்.அப்போது தோழிகள் மூலம் மூலக்குளம் ஜெ.ஜெ., நகரில் வசிக்கும் மதிவாணன், 24, என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மதிவாணன், நிவேதாவிற்கு ஜிப்மரில் ஒப்பந்த அடிப்படையில் வேலையும், குறைந்த தொகையில் போக்கியத்திற்கு வீடும் ஏற்பாடு செய்து தருவதாக கூறி, அவரிடம் கடந்தாண்டு டிசம்பர் 10ம் தேதி 1.50 லட்சம் ரூபாயை பெற்றார்.கூறியப்படி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது ஏதேனும் காரணம் கூறி இழுத்தடித்து வந்தார். நிவேதா பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்கவே ஒரு வீட்டை போக்கியத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக 40 ஆயிரத்தைவீட்டு உரிமையாளரிடம் கொடுத்தார். அந்தவீட்டை போக்கியத்திற்கு மதிவாணன் முடித்து கொடுத்திருப்பதாக கருதிய நிவேதா அமைதியாகிவிட்டார்.ஒரு மாதம் கழித்து, வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்கவே, நிவேதா அதிர்ச்சியடைந்தார். பணத்தை திரும்பி கேட்க மதிவாணன் வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவாகியது தெரிய வந்தது.இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து மதிவாணனை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X