பொது செய்தி

இந்தியா

சட்டசபையில் தமிழில் கவர்னர் உரை அசோக்பாபு எம்.எல்.ஏ., பாராட்டு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக் பாபு பேசியதாவது:புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் கவர்னர் உரை நிகழ்த்தியதற்கு பாராட்டுகிறேன். பிரதமர் மோடி தமிழ் மொழியின் பெருமைகளையும், தமிழ் மக்களின் கலாசாரத்தையும் எடுத்துரைக்க தவறுவதில்லை.விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கி பட்ஜெட்டில் அறிவித்துள்ளது

புதுச்சேரி,-சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக் பாபு பேசியதாவது:புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் கவர்னர் உரை நிகழ்த்தியதற்கு பாராட்டுகிறேன். பிரதமர் மோடி தமிழ் மொழியின் பெருமைகளையும், தமிழ் மக்களின் கலாசாரத்தையும் எடுத்துரைக்க தவறுவதில்லை.விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கி பட்ஜெட்டில் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.கொரோனா காலத்தில் புதுச்சேரியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் ஆ்கியோர் சிறப்பாக பணியாற்றியதை எடுத்துரைத்தது, புதுச்சேரியில் ஆயூஸ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்களை பயனாளிகளாக தேர்ந்தெடுத்து வழங்கியது பாராட்டத்தக்கது.புதுச்சேரி மாநிலத்தில் வேலையின்மை, வறுமை ஆகியவற்றை முதல்வர் தலைமையில் ஒழிக்கப்பட்டு, மாநிலம் வளர்ச்சி அடையும் என்பதை நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அது நிச்சயம் நடக்கும். கொரோனா காலத்தில் பொது சேவையில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X