பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த முயற்சியில் மறுசுழற்சி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தேனி : தேனியில் ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் வெளியேற்றும் குப்பையை சொந்த முயற்சியில் மறுசுழற்சி செய்வது குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 கிலோ குப்பை வெளியேற்றுபவர்களை 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' என்கின்றனர். தேனி நகராட்சியில் ஓட்டல்கள், மண்டபங்களில் இருந்து தினமும் 3 முதல் 5டன் குப்பை வெளியேறுகிறது.

தேனி : தேனியில் ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் வெளியேற்றும் குப்பையை சொந்த முயற்சியில் மறுசுழற்சி செய்வது குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 கிலோ குப்பை வெளியேற்றுபவர்களை 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' என்கின்றனர். தேனி நகராட்சியில் ஓட்டல்கள், மண்டபங்களில் இருந்து தினமும் 3 முதல் 5டன் குப்பை வெளியேறுகிறது. இதை சொந்த முயற்சியில் அகற்றி மறுசுழற்சி செய்ய கமிஷனர் சுப்பையா தலைமையில், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓட்டல், மண்டப உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

ஓட்டல், மண்டப குப்பையை சேகரித்து மறுசுழற்சி செய்திடவும், இட வசதி இல்லாத நிலையில் நகராட்சி இடம் வாடகைக்கு பெற்று கொள்ளலாம் என்றனர். இதற்கான இடம் இலவசமாக வழங்க கோரினர். உடன்பாடு ஏற்பட வில்லை. ஒரு மாதம் நகராட்சி குப்பையை பெற்று கொள்ளும். அதற்குள் குப்பையை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்து கொள்ள அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X