கூடலூர் : கூடலூரில் டெங்கு பரவலை தடுப்பதற்காக அனைத்து தெருக்களிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணி நகராட்சி சார்பில் நடந்தது.
கூடலூர் 8வது வார்டில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால் நகராட்சி, சுகாதாரத்துறையினர் இதற்கான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வார்டு வாரியாக காய்ச்சல் உள்ளவர்களை கண்டறியும் பணி நடந்தது. மேலும் அனைத்து தெருக்களிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணி கமிஷனர் சேகர், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.