பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிக்கட்டத்தில் அருங்காட்சியக பணிகள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கம்பம் : சுருளி அருவியில்சுற்றுலா பயணிகள்பார்வையிட வன உயிரினங்கள், பறவைகள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.சுற்றுலா தலமான சுருளி அருவியில்பயணிகள் கூட்டமாக குளிப்பர். கொரோனா கட்டுப்பாடுகளால் பலமாதமாக அனுமதிக்கப்படவில்லை.இதனிடையே அருவியில் மூலிகை பண்ணை, அருங்காட்சியகம், கடைகள் கட்டுதல் போன்ற பணிகள் செய்ய அனுமதி கிடைத்தது.

கம்பம் : சுருளி அருவியில்சுற்றுலா பயணிகள்பார்வையிட வன உயிரினங்கள், பறவைகள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

சுற்றுலா தலமான சுருளி அருவியில்பயணிகள் கூட்டமாக குளிப்பர். கொரோனா கட்டுப்பாடுகளால் பலமாதமாக அனுமதிக்கப்படவில்லை.இதனிடையே அருவியில் மூலிகை பண்ணை, அருங்காட்சியகம், கடைகள் கட்டுதல் போன்ற பணிகள் செய்ய அனுமதி கிடைத்தது. அருங்காட்சியகத்தில் சுருளி வனப்பகுதியில் வாழும் அரிய வகை பறவைகள்,வன உயிரினங்கள் பட விளக்கங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட வனஉயிரினங்கள், அவற்றின் விபரங்கள், சுற்றுச்சூழல் நன்மைகள் போன்றவை பயணிகள் பார்ப்பதற்காக வைக்கப்பட உள்ளன.கடந்தாண்டு கொரோனா பரவலுக்கு முன் பணிகள் துவங்கியது.

கொரோனாவால் பணி நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. படங்கள் வரையும் பணிகள் நடப்பதாகவும், அருவிக்கு பயணிகளை அனுமதிக்கும் போது அருங்காட்சியகமும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X