விவசாயிகள் நகை கடனை தள்ளுபடி செய்ய பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் கோரிக்கை

Added : ஆக 28, 2021 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் பேசியதாவது:மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிரதமர் மோடி தமிழ் தெரிந்த, அரசுடன் இணக்கமாக செல்லும் ஒருவரை கவர்னராக நியமித்துள்ளார். அவரை பயன்படுத்தி, நமது மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.கடந்த 5 ஆண்டு காலத்தில் மாநிலம் பல விஷயங்களில் பின் தங்கிவிட்டது.

புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் பேசியதாவது:மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிரதமர் மோடி தமிழ் தெரிந்த, அரசுடன் இணக்கமாக செல்லும் ஒருவரை கவர்னராக நியமித்துள்ளார். அவரை பயன்படுத்தி, நமது மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.கடந்த 5 ஆண்டு காலத்தில் மாநிலம் பல விஷயங்களில் பின் தங்கிவிட்டது. காலாப்பட்டில் மக்களுக்கு எதுவுமே செய்யாததால், அந்த தொகுதியை சேர்ந்தவர் வேறு தொகுதியில் போட்டியிட்ட நிலை கடந்த ஆட்சியில் இருந்தது.மக்கள் நம்பிக்கை வைத்து என்.ஆர். காங்., -பா.ஜ., கூட்டணி அரசை தேர்வு செய்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும். கொரோனா நேரத்தில் சிறப்பாக சேவை செய்தவர்களை எம்.எல்.ஏ., க்களாக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற நகை கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய காவலர்களுக்கு சரியான நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை வழங்கி, புதிய பணிகளை செய்து தர வேண்டும். கவர்னர், முதல்வர் இணைந்து மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X