கிராமப்புறங்களில் அடிப்படை வசதி செந்தில்குமார் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிராமப்புறங்களில் அடிப்படை வசதி செந்தில்குமார் வேண்டுகோள்

Added : ஆக 28, 2021
Share
புதுச்சேரி-கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., செந்தில்குமார் எம்எல்ஏ., பேசியதாவது;புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பாகூர் தொகுதி புராதான கோவில்களையும், பெரும் நீர்நிலைகளையும் உள்ளடக்கியது.கடந்த காலத்தில் முதல்வர் கிராமப்புற வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தியவர்.கிராம புற மக்களுக்கு திட்டங்களை வகுத்தவர் இன்று கிராம புற மக்களின்

புதுச்சேரி-கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., செந்தில்குமார் எம்எல்ஏ., பேசியதாவது;புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பாகூர் தொகுதி புராதான கோவில்களையும், பெரும் நீர்நிலைகளையும் உள்ளடக்கியது.கடந்த காலத்தில் முதல்வர் கிராமப்புற வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தியவர்.கிராம புற மக்களுக்கு திட்டங்களை வகுத்தவர் இன்று கிராம புற மக்களின் எதிர்பார்ப்பும் தேவைகளும் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. சுத்தமான குடிநீர், விளையாட்டு மைதானம், திடக்கழிவு மேலாண்மை, நிலத்தடி நீர் மேலாண்மை, மீன்பிடி வேலைவாய்ப்பு போன்ற பல தேவைகள் உள்ளது. அவைகளை நிறைவேற்ற வேண்டும்.கவர்னர் முதல் முறையாக இந்த சபையில் 15 திருக்குறளை மேற்கோள் காட்டியது பெரு மகிழ்ச்சி. கொரோனா காலத்தில் கவர்னர் பாகூர் தொகுதி, மணப்பட்டு கிராமத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றவர், திருநாவுக்கரசரின் தேவார பாடலை பாடி தனது உரையை முடித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X