பொது செய்தி

இந்தியா

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்: சம்பத்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் பேசியதாவது;புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் கடந்தாண்டு 12,000 பேர் பல்வேறு கனவுகளுடன் கல்வி முடித்து வெளியே வந்தனர். ஆனால் 2020ம் ஆண்டில் வேலை வாய்ப்பு முகாம் மூலம் 188 பேர் மட்டுமே வேலை பெற்றனர்.வேலை வாய்ப்பிற்கு போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு இல்லங்களும்

புதுச்சேரி-சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் பேசியதாவது;புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் கடந்தாண்டு 12,000 பேர் பல்வேறு கனவுகளுடன் கல்வி முடித்து வெளியே வந்தனர். ஆனால் 2020ம் ஆண்டில் வேலை வாய்ப்பு முகாம் மூலம் 188 பேர் மட்டுமே வேலை பெற்றனர்.வேலை வாய்ப்பிற்கு போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு இல்லங்களும் அறிவிக்கப்படாத அனாதை இல்லங்களாக மாறுவதை தவிர்க்க முடியாது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.தொகுதி மக்களின் தாகத்தை தீர்க்கும் உழந்தை ஏரி, முருங்கப்பாக்கம் ஏரிகள் மனைப் பிரிவுகளாக்கி விற்பனை செய்யப்படும் அச்சம் உள்ளது. இவற்றில் மீன் பிடி குத்தகையாளர்கள் தண்ணீரை வெளியேற்றுகின்றனர். சேமித்து வைக்கும் மழை நீர் வீணாகிறது. பாரதி மில் பகுதியில் 75 ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.மத்திய அரசிடம் மாநிலத்திற்கு அதிக நிதி பெற்று, வேலை வாப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் அறிக்கையில் பின்தங்கிய எனது தொகுதிக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனது தொகுதியில் உள்ள 2 பஞ்சாலைகளை புனரமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X