பொது செய்தி

இந்தியா

50 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: கென்னடி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'கவர்னர் உரையில் பெரிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது' என, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிபால்கென்னடி பேசினார்.கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உப்பளம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி பேசியதாவது:கவர்னர் உரையில் பெரிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மாநில அந்தஸ்து, புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பது போன்ற பிரச்னைகள்

புதுச்சேரி-'கவர்னர் உரையில் பெரிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது' என, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிபால்கென்னடி பேசினார்.கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உப்பளம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி பேசியதாவது:கவர்னர் உரையில் பெரிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மாநில அந்தஸ்து, புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பது போன்ற பிரச்னைகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர், லடாக் பிரதேசங் கள் கூட நிதி கமிஷனில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இன்னும் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. ஜி.எஸ்.டி., அமுல்படுத்தப்பட்ட பிறகு நிதி வருவாயை பெருக்குவதில் சவால் இருப்பதாக கவர்னர் கூறியுள்ளார்.புதுச்சேரியில் நிதி ஆதாரத்தை பெருக்கவும், பற்றாக்குறையை சமாளிக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கவில்லை. மருத்துவ கல்லுாரிகளில் ௫௦ சதவீத இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இல்லாததது ஏமாற்றம் அளிக்கிறது.எனது தொகுதியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியாக இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் மக்களுக்கு துாய்மையான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் சேர்க்கப்படவேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X