ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: நாஜிம் எம்.எல்.ஏ., பேச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: நாஜிம் எம்.எல்.ஏ., பேச்சு

Added : ஆக 28, 2021
Share
புதுச்சேரி-சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் பேசியதாவது:இந்த அரசு எந்த திசை நோக்கிச் செல்ல வேண்டும், எப்படி பயணிக்கப் போகிறது என்பது குறித்து கவர்னர் உரையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரமுள்ளது என்ற போட்டியால் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் வீழ்ச்சி அடைந்தது.அரசியலமைப்பு படி கவர்னருக்கு

புதுச்சேரி-சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் பேசியதாவது:இந்த அரசு எந்த திசை நோக்கிச் செல்ல வேண்டும், எப்படி பயணிக்கப் போகிறது என்பது குறித்து கவர்னர் உரையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரமுள்ளது என்ற போட்டியால் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் வீழ்ச்சி அடைந்தது.அரசியலமைப்பு படி கவர்னருக்கு அதிகாரமிருந்தாலும், மரபின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். அரசின் அறிவிப்புகள் அனைத்தும் கவர்னர் பெயரிலேயே வருகிறது. இது ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதையே உணர்த்துகிறது.முதல்வர் பெட்ரோலுக்கு ஜி.எஸ்.டி., வரியை 3 சதவீதம் குறைத்து பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதற்கு முன்பே கவர்னர் ஒப்புதல் அளித்ததாக நாளிதழ்களில் செய்தி வருவது இந்த சபைக்கு இழுக்கு அல்லவா?கவர்னர், தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை இணைக்க வேண்டும். அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.500 கோடி நிதி கூடுதலாக கிடைக்கும்.மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.2.5 கோடி வட்டி கட்டி வருகிறோம். இதனை தவிர்க்க காங்., அரசில் கொண்டு வரப்பட்ட பொதுகணக்கு முறையை மாற்றி, பழைய கணக்கு (70:30) முறைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.இப்போது கிடைக்கும் ரூ.10 ஆயிரம் கோடியை வைத்து, சிறந்த புதுச்சேரியை உருவாக்க முடியாது. ஆராய்ந்து அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X