பொது செய்தி

இந்தியா

நவோதயா பள்ளிகளில் பிளஸ் 1 சேர 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் நவோதயா பள்ளிகளில் பிளஸ் 1ல் சேர விண்ணப்பிக்கும் தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி காலாப்பட்டு மற்றும் காரைக்காலில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும்

புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் நவோதயா பள்ளிகளில் பிளஸ் 1ல் சேர விண்ணப்பிக்கும் தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி காலாப்பட்டு மற்றும் காரைக்காலில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1ல் புதுச்சேரி நவோதயாவில் அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவிற்கும் மற்றும் காரைக்கால் நவோதயாவில் அறிவியல், வணிகவியல் மற்றும் மனிதநேயவியல் பிரிவுகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 26ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X