பொது செய்தி

இந்தியா

கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது; காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேச்சு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசியதாவது:மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், மாநிலத்திற்கு அதிக நிதி பெற்று, 'பெஸ்ட் புதுச்சேரி' உருவாக்க முடியும். புதிய திட்டங்கள் கொண்டு வந்து மாநிலத்தை முன்னேற்ற முடியும் என்ற எதிர்பார்ப்புடன் அமைக்கப்பட்டது இந்த ஆட்சி. ஆனால், அதற்கான அறிவிப்புகள் கவர்னர் உரை

புதுச்சேரி-சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசியதாவது:மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், மாநிலத்திற்கு அதிக நிதி பெற்று, 'பெஸ்ட் புதுச்சேரி' உருவாக்க முடியும். புதிய திட்டங்கள் கொண்டு வந்து மாநிலத்தை முன்னேற்ற முடியும் என்ற எதிர்பார்ப்புடன் அமைக்கப்பட்டது இந்த ஆட்சி. ஆனால், அதற்கான அறிவிப்புகள் கவர்னர் உரை மற்றும் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த காலங்களில் முந்தைய ஆண்டை விட 5 முதல் 10 சதவீதம் கூடுதல் நிதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்தாண்டைவிட 1.58 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்ப்பதாக கூறப்பட்டது. அப்படி செய்திருந்தால், 40 சதவீதம் நிதி கொடை கிடைத்திருக்கும். அதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியின் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றிட தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.கொரோனா பரவலில் இந்த அரசில் ஏற்பட்ட அதிகார போட்டியினால், இறப்பு அதிகரித்தது. இருப்பினும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மற்றும் முன்களப்பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தினர். அதற்காக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை பாராட்டுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X