பொது செய்தி

இந்தியா

முத்துரத்தினம் பள்ளியில் சலங்கை பூஜை விழா

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளுக்கு சலங்கை பூஜை விழா நடந்தது.டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முதல்வர் ரங்கசாமி, நாட்டிய மாணவிகளை வாழ்த்தினார். சபாநாயகர் செல்வம் விழாவை தொடங்கி வைத்தார்.கோஜூரியோ கராத்தே சங்க தலைவர் எம்.எல்.ஏ., நேரு, பரிசு,

புதுச்சேரி-கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளுக்கு சலங்கை பூஜை விழா நடந்தது.டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முதல்வர் ரங்கசாமி, நாட்டிய மாணவிகளை வாழ்த்தினார். சபாநாயகர் செல்வம் விழாவை தொடங்கி வைத்தார்.கோஜூரியோ கராத்தே சங்க தலைவர் எம்.எல்.ஏ., நேரு, பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். நடன துறைத்தலைவர் லுார்தஸ் சாந்தி, தேசிய மாணவர் படை அதிகாரி சுப்பிரமணியன், உதவிப்பேராசிரியர் விசித்ரா பாலிக்கண்டி, டாக்டர் ரங்கநாயகி வளவன், கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன், மனிதநேய மக்கள் சேவை இயக்கம் விநாயகம், கவுண்டன்பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பங்கேற்றனர்.மாணவிகள் பூஜா, உமாமகேஸ்வரி, தேவிபிரியா, புஷ்பா, ரோஷினி, பெனிசியா, அருவி, கவினயா, கல்பனா, பிரியதர்ஷினி, விஜயதர்ஷினி ஆகியோர் பரதநாட்டியம் அரங்கேற்றினர். ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி, விஜய தீபன், ஜஸ்டின் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X