பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் ராணுவ கல்லூரி அமைக்க கோரிக்கை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் ராணுவ கல்லுாரி, விமானப்படை கல்லுாரி அமைக்க வேண்டும் என, வெங்கடேசன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை;கடந்த ஆட்சியில் ஒரு இளைஞருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் மத்திய அரசோடு ஒத்து போகிற அரசாங்கம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.இந்தநேரத்தில், புதுச்சேரியில் ராணுவ கல்லுாரி, கடல் சார்

புதுச்சேரி-புதுச்சேரியில் ராணுவ கல்லுாரி, விமானப்படை கல்லுாரி அமைக்க வேண்டும் என, வெங்கடேசன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை;கடந்த ஆட்சியில் ஒரு இளைஞருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் மத்திய அரசோடு ஒத்து போகிற அரசாங்கம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.இந்தநேரத்தில், புதுச்சேரியில் ராணுவ கல்லுாரி, கடல் சார் பல்கலைக்கழகம், ஏர் போர்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்., போன்ற தேசிய தரம் வாய்ந்த கல்லுாரிகளை கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தி, புதுச்சேரி அரசு பெற வேண்டும்.இதுபோன்ற சூழலில் தான், கடந்த காலங்களில், ஜிப்மர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், காரைக்கால் என்.ஐ.டி, புதுச்சேரி விமான நிலையம் போன்றவை அமைந்தது.எனவே, இந்த ஆட்சியில் இதுபோன்ற தேசிய கல்வி நிறுவனங்கள் புதுச்சேரியில் கொண்டு வந்ததால், பெரிய வரலாறு மட்டுமில்லை சிறப்பு அம்சமாகும். தேசிய கல்லுாரிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். மத்திய அரசின் உயர் பதவிகளில் புதுச்சேரி மாணவர்கள் நிச்சயம் இடம்பெறுவர்.இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.எனவே விரைவில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க டில்லி செல்ல உள்ள முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், புதுச்சேரிக்கு தேசிய கல்வி நிறுவனங்களை கொன்டு வர வலியுறுத்தி அதற்கான பூர்வாங்க வேலைகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X