பாகூர் பஞ்சாயத்து ஆணையர் எச்சரிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாகூர் பஞ்சாயத்து ஆணையர் எச்சரிக்கை 

Added : ஆக 28, 2021
Share
பாகூர்-காலி மனைகளில் தண்ணீர் தேங்கி இருந்தால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல இடங்களில், வீட்டு மனைகள் காலியாக உள்ளன. அவற்றில் மழை நீர், மற்றும் கழிவு நீர் தேங்கி நின்று கொசு மற்றும் ஈக்கள் மொய்த்து,

பாகூர்-காலி மனைகளில் தண்ணீர் தேங்கி இருந்தால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல இடங்களில், வீட்டு மனைகள் காலியாக உள்ளன. அவற்றில் மழை நீர், மற்றும் கழிவு நீர் தேங்கி நின்று கொசு மற்றும் ஈக்கள் மொய்த்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, டெங்கு, காலரா நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எனவே, காலி வீட்டு மனைகளை வைத்திருப்போர், தங்களின் மனைகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல், மண் கொட்டி சமன்படுத்திக் கொள்ள வேண்டும்.தனியார் மனைப்பிரிவு உரிமையாளர்கள், தங்கள் வசம் உள்ள தாழ்வான காலி மனைப் பிரிவுகளில், மழை நீர் தேங்காமல் சரி செய்து கொள்ள வேண்டும். தவறினால், கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X