பொது செய்தி

இந்தியா

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா புதுச்சேரி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ஆனந்தா இன் ஓட்டலில் நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராய ணன் முன்னிலை வகித்தார்.முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல். ஏ.,க்கள் சிவா, ராமலிங்கம், சம்பத், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர்

புதுச்சேரி-பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா புதுச்சேரி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ஆனந்தா இன் ஓட்டலில் நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராய ணன் முன்னிலை வகித்தார்.முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல். ஏ.,க்கள் சிவா, ராமலிங்கம், சம்பத், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பதவியேற்பு கமிட்டி சேர்மன் செல்வகாந்தி வரவேற்றார்.பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்திய புதுச்சேரி கிளை தலைவராக கண்ணப்பன், செயலாளராக எழிலன், பொருளாளராக பிரேம்ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுக்கு, தமிழ்நாடு - புதுச்சேரி தலைவர் சிவக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:புதுச்சேரி கட்டட ஒப்பந்ததாரர்களை நம்பி நுாற் பாலை, குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் வழங்கினேன். சிறப்பாக கட்டி கொடுத்தனர். ரூ. 1,500 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் இதுவரை ரூ.89 கோடிக்கு பணி நடந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற பின் ரூ.260 கோடிக்கு பணியை உயர்த்தி உள்ளோம். ரூ.10 கோடிக்கு மேல் உள்ள பணிகளை ஒரே நபருக்கு வழங்குவதிற்கு பதில், 5 பேருக்கு பிரித்து கொடுத்தால் பணிகள் விரைவாக முடியும்.அழகான நகரமான புதுச்சேரியை மேலும் அழகுப்படுத்துவது, பில்டர்ஸ் கையில் உள்ளது. நம்முடைய மக்களுக்காக கட்டுகிறோம் என்பதை மனதில் வைத்து பணிகளை செய்ய வேண்டும். முந்தைய ஆட்சியில் இருந்த சிக்கல்கள் இனி இருக்காது. நிர்வாக சிக்கல்கள் இன்றி உங்கள் குறைகளை பொதுப்பணித்துறை தீர்த்து வைக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X