பொது செய்தி

தமிழ்நாடு

டாக்குமென்ட்ரியாகும் திண்டிவனம் உழவர் சந்தை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திண்டிவனம்-'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் திண்டிவனம் உழவர் சந்தை குறித்து டாக்குமென்ட்ரி தயாரிக்க கிண்டியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.திண்டிவனம் உழவர் சந்தை சர்க்கார் தோப்பு செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. கலெக்டர் மற்றும் வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி இங்கு தரிசு இடத்தில் இயற்கை முறையில் கீரை,
 டாக்குமென்ட்ரியாகும் திண்டிவனம் உழவர் சந்தை

திண்டிவனம்-'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் திண்டிவனம் உழவர் சந்தை குறித்து டாக்குமென்ட்ரி தயாரிக்க கிண்டியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

திண்டிவனம் உழவர் சந்தை சர்க்கார் தோப்பு செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. கலெக்டர் மற்றும் வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி இங்கு தரிசு இடத்தில் இயற்கை முறையில் கீரை, காய்கறிகள் பயிரிட்டு விற்பனை செய்யப்படுவது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதையொட்டி சென்னை, கிண்டியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையினர் உழவர் சந்தையில் செயல்படுத்தப்படும் ஆர்கானிக் கீரை, காய்கறிகள் பயிரிடல் மற்றும் விற்பனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், திண்டிவனம் உழவர் சந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகளும் இதேபோன்று செயல்பாட்டினை கொண்டு வர அறிவுறுத்தும் விதமாக, டாக்குமென்ட்ரி தயாரிக்க முடிவு செய்துள்ளது.அதற்காக திண்டிவனம் உழவர் சந்தையை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணியில் உதவி வேளாண்மை அலுவலர் சத்யா ஈடுபட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X