பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா

Added : ஆக 28, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா நடந்தது.விழுப்புரம் அடுத்த காணையைச் சேர்ந்தவர் அமீர் அப்பாஸ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர், முஸ்லிம் ஐக்கிய பேரவைத் தலைவர், காணை அபுபக்கர் சித்தி (ரலி) பள்ளிவாசல் முத்தவல்லி ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். இவரது மனைவி பரீதாபேகம், காணை முன்னாள் ஊராட்சித்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா நடந்தது.

விழுப்புரம் அடுத்த காணையைச் சேர்ந்தவர் அமீர் அப்பாஸ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர், முஸ்லிம் ஐக்கிய பேரவைத் தலைவர், காணை அபுபக்கர் சித்தி (ரலி) பள்ளிவாசல் முத்தவல்லி ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். இவரது மனைவி பரீதாபேகம், காணை முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர்களின் மகள் ராபியா பானுவுக்கும், அபிபுல்லா - சபியா பேகம் மகன் ஆஷிக் அகமதுவுக்கும் காணையில் திருமணம் நடந்தது.மாவட்ட தலைவர் முகமது இப்ராகிம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரகுமான், முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் இப்ராகிம் மக்கீ, மாவட்ட பொருளாளர் அப்துல்கனி, இணைச் செயலாளர் சுல்தான் மொய்தீன் வாழ்த்திப் பேசினர்.மாவட்ட துணைத் தலைவர் அப்துல் குத்துாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சையத் ஆரீப், நகர தலைவர் ஷாகுல் அமீது, நகர செயலாளர் கமாலுதின், உலமாக்கள் சபை கவுரவத் தலைவர் பக்ருதின் அலிஅகமது, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஜிகினி முகமது அலி, முகமது கவுஸ்.வி.சி., பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., த.மு.மு.க., மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன், பொருளாளர் அப்பாஸ், விழுப்புரம் வடக்கு மாவட்ட தொழில்நுட்பச் செயலாளர் மொக்தியார் மஸ்தான், அலி அகமத், காங்., துணைத் தலைவர் குலாம் மொய்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.எஸ்.எம்.ஏ., குரூப் கம்பெனி சேர்மன் அப்துல் அக்கீம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X