சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்; குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்; குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 28, 2021
Share
விழுப்புரம்-சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கை விபரம்:மாவட்ட ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.

விழுப்புரம்-சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கை விபரம்:மாவட்ட ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்பட வில்லை. சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு 3 அங்குல பைப் வழங்க வேண்டும்.திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து முதல் போக சம்பா சாகுபடிக்காக தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசனம் பெறும். எனவே, முதல் போக சாகுபடிக்கு சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேரடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில், கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். வியாபாரிகளும், அதிகாரிகளும் சிண்டிகேட் அமைத்து வெளி மாநில வியாபாரிகளை அனுமதிப்பதில்லை. வேளாண் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்றனர்.இதற்கு, கலெக்டர் மோகன் பதில் அளித்து பேசுகையில், 'விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், வேளாண் இணை இயக்குனர் ரமணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X