தியாகதுருகத்தில் காற்றுடன் கன மழை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-தியாகதுருகம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது.தியாகதுருகம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2:00 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், கள்ளக்குறிச்சி - கூத்தகுடி சாலையின் குறுக்கே பல இடங்களில் பெரிய அளவிலான புளிய மரங்கள் சாய்ந்தன.கண்டாச்சிமங்கலம்பஸ் நிறுத்தத்தில்

தியாகதுருகம்-தியாகதுருகம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது.தியாகதுருகம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2:00 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், கள்ளக்குறிச்சி - கூத்தகுடி சாலையின் குறுக்கே பல இடங்களில் பெரிய அளவிலான புளிய மரங்கள் சாய்ந்தன.கண்டாச்சிமங்கலம்பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ மீது புளியமரம்சாய்ந்தது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மரம் சாய்வதை உணர்ந்து அங்கிருந்து ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இதேபோன்று, பொரசகுறிச்சி பஸ் நிறுத்தம் அருகே விருகாவூர் - அசகளத்துார் சாலையின் குறுக்கே 4 இடங்களில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது.நெடுஞ்சாலைத் துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதன் காரணமாக மாலை 5:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X