பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி, நாசரேத் சி.எஸ்.ஐ., தேர்தலுக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை : துாத்துக்குடி நாசரேத் திருமண்டலம் (சி.எஸ்.ஐ.,) தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.துாத்துக்குடி செய்துங்கநல்லுார் சகாயராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: துாத்துக்குடி நாசரேத் திருமண்டலம் (சி.எஸ்.ஐ.,) நிர்வாகத்தின் கீழ் பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளன. இவை அரசின் உதவி பெறுபவை. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது.

மதுரை : துாத்துக்குடி நாசரேத் திருமண்டலம் (சி.எஸ்.ஐ.,) தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

துாத்துக்குடி செய்துங்கநல்லுார் சகாயராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: துாத்துக்குடி நாசரேத் திருமண்டலம் (சி.எஸ்.ஐ.,) நிர்வாகத்தின் கீழ் பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளன. இவை அரசின் உதவி பெறுபவை. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. அரசு உதவி பெறும் பள்ளி ஊழியர்கள் மத நிறுவனங்கள் உட்பட எந்த ஒரு அமைப்பின் தேர்தலில் பங்கேற்பதை சட்டம், விதிகள் தடை செய்கிறது.

சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களின் ஊழியர்களில் சிலர் விதிகளை மீறி சர்ச் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடியும்வரை பள்ளிகள், நிறுவனங்களின் பணி மட்டுமன்றி, மாணவர்களின் நலன் பாதிக்கிறது.சி.எஸ்.ஐ.,நிர்வாகத்தின் கீழ் உள்ள துாத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலால் மாணவர்கள், கல்வி நிறுவன செயல்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். துாத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கமிஷனர் ஒருவரை நியமித்து முறையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு சகாயராஜ் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு: இது தனிநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X