பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கோபுரத்தில் சந்தனக் கல் பதிக்கும் பூஜை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணியில் ராஜகோபுரத்தில், சந்தனக் கல் பதிக்கும் பூஜை நடந்தது.விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் புனரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. புதியதாக கோவிலுக்கு மூன்று அடுக்குகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்டுமானப் பணி நடக்கிறது.நேற்று காலை ராஜகோபுரத்தின் உச்சியில் சந்தனக் கல்

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணியில் ராஜகோபுரத்தில், சந்தனக் கல் பதிக்கும் பூஜை நடந்தது.விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் புனரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. புதியதாக கோவிலுக்கு மூன்று அடுக்குகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்டுமானப் பணி நடக்கிறது.நேற்று காலை ராஜகோபுரத்தின் உச்சியில் சந்தனக் கல் பதிக்கும் பூஜைக்காக நவதானியம், வெள்ளி, தங்க நாணயங்கள் வைத்து அத்தியூர் சக்கரை பாகவதர், சந்திரசேகர குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர்.பின், ஸ்தபதி முருகன் ராஜகோபுரத்தின் உச்சியில் கலசம் வைப்பதற்காக சந்தனக் கல் பதித்து அதில் நவதானியம், வெள்ளி தங்க நாணயங்களை வைத்தார்.நிகழ்ச்சியில் திருப்பணிக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பூர்ணராவ், பொருளாளர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன், முன்னாள் சேர்மன் குமாரசாமி, கவுரவ தலைவர் சுப்புராயலு, குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X