பொது செய்தி

தமிழ்நாடு

பணி நிரந்தரம் செய்ய நில அளவை கணினி பதிவாளர் வலியுறுத்தல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை : 'தாலுகா அலுவலகங்களில் நிலஅளவை பதிவேடு துறையில் ஏழாண்டுகளாக பணிபுரிவோரை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு நில அளவை கணினி பதிவாளர் சங்கம் வலியுறுத்தியது.சங்க மாநில பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் சரவணகுமார் கூறியதாவது: 2021 தமிழக அரசு உத்தரவின்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து

மதுரை : 'தாலுகா அலுவலகங்களில் நிலஅளவை பதிவேடு துறையில் ஏழாண்டுகளாக பணிபுரிவோரை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு நில அளவை கணினி பதிவாளர் சங்கம் வலியுறுத்தியது.

சங்க மாநில பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் சரவணகுமார் கூறியதாவது: 2021 தமிழக அரசு உத்தரவின்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு பிறகு 235 கணினி பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஆன்லைன் வழயிாக நன்செய், புன்செய், யு.டி.ஆர்., நகர்ப்புற நிலவரித்திட்டம் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொகுப்பூதியத்தை தவிர வேறு எந்த சலுகைகளும் இல்லை. 2017ல் பணிநிரந்தரப்படுத்த கல்வித்தகுதிக்கு ஏற்ப தட்டச்சர், இளநிலை உதவியாளர், வரைவாளர் பணிக்கு கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு போன்றவை நடந்தன. ஆனால் இதுவரை பணி நிரந்தரப்படுத்தப்படவில்லை. பலர் வயது முதிர்வால் வேறு பணிகளுக்கு செல்ல முடியவில்லை. 235 பேரில் 25 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் உள்ளனர். எனவே சட்டசபை வருவாய் மானியக்கோரிக்கையின் போது கணினி பதிவாளர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X