சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக்கோரி உளுந்துார்பேட்டை அருகே மறியல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. பணியின் போது குடிநீர் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டது.அப்பகுதி மக்கள் பிற பகுதிகளுக்குச் சென்று

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. பணியின் போது குடிநீர் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டது.அப்பகுதி மக்கள் பிற பகுதிகளுக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்தனர். இதுகுறித்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று காலை 8:00 மணியளவில் உளுந்துார்பேட்டை - திருவெண்ணைநல்லுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.திருநாவலுார் பி.டி.ஓ., செந்தில்முருகன், டி.எஸ்.பி., மணிமொழியன், சப் இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று, 8:45 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.பி.டி.ஓ., கூறுகையில், 'பாண்டூரில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது பைப் லைன் உடைந்தது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க கடந்த பிப்ரவரி மாதம் 4.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. சட்டசபை தேர்தல் காரணமாக பைப் லைன் அமைக்கும் பணி நடைபெறவில்லை.தற்போது அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் விரைவில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X