தமிழ்நாடு

நிலம் அளவீடு செய்ய லஞ்சம் கேட்பதாக பகிரங்க புகார்; விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பரபரப்பு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நிலம் மற்றும் இடங்கள் அளவீடு செய்ய லஞ்சம் கொடுத்தால் மட்டுமே 'சங்கிலி' எடுக்கப்படும் என்ற சூழலில் அதிகாரிகள் உள்ளனர் என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பகிரங்கமாக புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல மாதங்களுக்குப் பிறகு நேரடியாக விவசாயிகள் குறைகேட்புக்
நிலம் அளவீடு செய்ய லஞ்சம் கேட்பதாக  பகிரங்க புகார்; விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நிலம் மற்றும் இடங்கள் அளவீடு செய்ய லஞ்சம் கொடுத்தால் மட்டுமே 'சங்கிலி' எடுக்கப்படும் என்ற சூழலில் அதிகாரிகள் உள்ளனர் என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பகிரங்கமாக புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல மாதங்களுக்குப் பிறகு நேரடியாக விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கை விபரம்:பருவ மழைக்கு முன்பாக சாத்தனுார் அணையிலிருந்து தண்ணீர் வரும் வாய்க்கால்களை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு பயிரில் இடைக்கணு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஓட்டுண்ணி மையம் அமைக்க வேண்டும்.கரும்புக்கான காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். பொதுப்பணித் துறை மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், வாய்க்கால்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.பூட்டையில் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வாணாபுரம் வாரசந்தைக்குச் செல்லும் மண் பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.தகுதியுள்ள விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும். ஆடு, மாடு, கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கால்நடை உலர் தீவனங்கள் வழங்க வேண்டும். உலர்களம் இல்லாததால் பல இடங்களில் சாலைகளில் விவசாய பொருட்களைக் கொட்டி காய வைக்கின்றனர். எனவே, அனைத்து கிராமங்களிலும் உலர்களம் அமைக்க வேண்டும்.

கல்வராயன்மலையில் கைக்கான் வளைவு திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பாதிப்படைய நேரிடும்.மாவட்டத்தில், விவசாயிகளிடையே நிலம் மற்றும் இடம் பிரச்னை போன்ற பல்வேறு பணிகளுக்கு அளவீடு செய்ய லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அதிகாரிகள் சங்கிலியை எடுக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். (இந்த பகிரங்க புகாருக்கு அனைத்து விவசாயிகளும் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர்).

மேலும், திருநாவலுார் கூட்டுறவு வங்கியில் திருடு போன விவசாயிகள் அடகு வைத்த நகைகளுக்கான உரிய பணம் இதுவரை வழங்கவில்லை.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு டோக்கன் வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும்.மணலுார்பேட்டை - கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், விவசாயிகளின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.டி.ஆர்.ஓ., விஜய்பாபு, வேளாண்மை இணை இயக்குனர் ஜெகந்நாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (விவசாயம்) விஜயராகவன், (பொது) சுரேஷ், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி, ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சாய்வர்தினி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X