பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் தலைமறைவான பெண் இன்ஸ்பெக்டர் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் பேக் வியாபாரி அர்ஷத்திடம் 32, பத்து லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி 35, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அர்ஷத். பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் ரூ.10 லட்சத்துடன் ஜூலை 5 மதுரை நாகமலைபுதுக்கோட்டை வந்தார்.இதையறிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும்
 வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் தலைமறைவான பெண் இன்ஸ்பெக்டர் கைது

மதுரை : மதுரையில் பேக் வியாபாரி அர்ஷத்திடம் 32, பத்து லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி 35, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அர்ஷத். பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் ரூ.10 லட்சத்துடன் ஜூலை 5 மதுரை நாகமலைபுதுக்கோட்டை வந்தார்.இதையறிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் பணத்தை பறித்தனர். இதுகுறித்து ஜூலை 27ல் அர்ஷத் எஸ்.பி., பாஸ்கரனிடம் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வசந்தி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் வசந்தி தவிர மற்றவர்கள் கைதான நிலையில், முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் வசந்தி மனு செய்தார். வசந்தியை கைதுசெய்யாதது ஏன் என ஆக.,23ல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதைதொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடினர். நேற்றுமுன்தினம் மதுரை தல்லாகுளம் போலீஸ் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் டி.எஸ்.பி., ரவிக்குமார் தலைமையில் சோதனை நடந்தது. நகை சீட்டு உள்ளிட்ட சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வசந்தியின் அலைபேசி டவர் மூலம் அவர் கோத்தகிரியில் இருப்பது உறுதியானது.

நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார், அங்குள்ள விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்த வசந்தியை கைது செய்தனர். அப்போது அவர் போலீசாருக்கு ஒத்தழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் மதுரை அழைத்துவரப்பட்டார்.நேற்று காலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட வசந்தியை பத்திரிகை போட்டோகிராபர்கள் படம் எடுக்க நெருங்க விடாமல் போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் செப்.,9 வரை 'ரிமாண்ட்' செய்யப்பட்டு, நிலக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வசந்தியின் தம்பி குண்டு பாண்டியராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X