பகண்டை கூட்ரோடு பகுதியில் மழை கரும்பு நாற்று மூழ்கின| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பகண்டை கூட்ரோடு பகுதியில் மழை கரும்பு நாற்று மூழ்கின

Added : ஆக 28, 2021
Share
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் செம்மை சாகுபடி முறையில் கரும்பு பயிரிடப்படுகிறது. அதனையொட்டி எடுத்தனுாரில், பசுமை நிழல்வலை குடில் அமைத்து, தனியார் நர்சரி மூலம், பிளாஸ்டிக் அட்டை குழி தட்டில் அடைத்து, அதில் பருசிவல் செய்த கரும்பு துண்டை வைத்து 40 நாட்களில் நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.நர்சரியில்

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் செம்மை சாகுபடி முறையில் கரும்பு பயிரிடப்படுகிறது. அதனையொட்டி எடுத்தனுாரில், பசுமை நிழல்வலை குடில் அமைத்து, தனியார் நர்சரி மூலம், பிளாஸ்டிக் அட்டை குழி தட்டில் அடைத்து, அதில் பருசிவல் செய்த கரும்பு துண்டை வைத்து 40 நாட்களில் நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.நர்சரியில் இருந்த நாற்றுகள் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில், பகண்டைகூட்ரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் மழையினால் நாற்றுகள் நீரில் மூழ்கின.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X