சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கடலுார்-மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ. 1,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். வீரமணி, அரி நாராயணன், சுந்தரபாண்டியன், நாகலட்சுமி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர்

கடலுார்-மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ. 1,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். வீரமணி, அரி நாராயணன், சுந்தரபாண்டியன், நாகலட்சுமி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஜான்சிராணி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ராஜா, துணைத் தலைவர்கள் கல்யாண சுந்தரம், வசந்தி, இணை செயலர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ராசையன் தலைமை தாங்கினார். ராமலிங்கம், சீனுவாசன், பழனிசாமி, கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஜான்சிராணி , மாவட்ட இணை செயலர் ஜீவா, மாவட்ட குழு ரஞ்சித், தனசேகர், கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி, மா. கம்யூ., வட்ட செயலர் அசோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர். கிளை செயலர்கள் சேகர், கங்காதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X