பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்புச் சுவர் அமைக்க 10 கிராம மக்கள் எதிர்ப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அருகே புதுச்சேரி செல்லும் சாலையின் மத்தியில் தடுப்பு சுவர் அமைக்க 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கடலுார்-புதுச்சேரி செல்லும் சாலையில் பெண்ணையாறுபாலம் அருகே பெரிய கங்கணாங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையடுத்து கிழக்கு நோக்கி உச்சிமேடு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலையில் சரஸ்வதி நகர், தியாகுநகர்,

கடலுார்-கடலுார் அருகே புதுச்சேரி செல்லும் சாலையின் மத்தியில் தடுப்பு சுவர் அமைக்க 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடலுார்-புதுச்சேரி செல்லும் சாலையில் பெண்ணையாறுபாலம் அருகே பெரிய கங்கணாங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையடுத்து கிழக்கு நோக்கி உச்சிமேடு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலையில் சரஸ்வதி நகர், தியாகுநகர், பெரியகங்காணாங்குப்பம் விரிவாக்கம், உச்சிமேடு, நாணமேடு, பாலாஜி நகர், சுபா உப்பலவாடி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக மீனவர் கிராமமான சுபாஉப்பலவாடி கிராமத்திற்கு அரசு பஸ் தடம் எண் 21 செல்கிறது. இதன் வழியாக ஏராளமான வாகனங்கள் திரும்புவதால் கடந்த 1919-20ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அடிக்கடி விபத்து நடக்கும் இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள 2 சிறிய பாலங்களை அகலப்படுத்தி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்க பள்ளம் தோண்டப்படுகிறது.இதனால் உச்சிமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு புதுச்சேரி சாலையில் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதால் 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உள் கிராமங்களில் இருந்து விளையும் காய்கறி மூட்டைகள், மீன்கள், ஏராளமான இரு சக்கர வாகனங்கள் புதுச்சேரி-கடலுார் சாலைக்கு வர வேண்டியுள்ளன. இவை அனைத்து வாகனங்களும் சாலையில் தேவையில்லாமல் 50 மீட்டர் துாரம் சென்று திரும்பும் நிலை உள்ளது. எனவே அந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வாதிட்டனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X