கிரைம் செய்திகள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஆற்றுமணல் கடத்தியவர் கைதுவிருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாடா ஏஸ் வாகனத்தில் ஆற்று மணல் கடத்திய ஏனாதி மேடு பகுதியைச் சேர்ந்த சேட்டு, 37; என்பவரை கைது செய்து டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மணல் கடத்தியவர் கைது திட்டக்குடி: ராமநத்தம் சப்இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன்

ஆற்றுமணல் கடத்தியவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாடா ஏஸ் வாகனத்தில் ஆற்று மணல் கடத்திய ஏனாதி மேடு பகுதியைச் சேர்ந்த சேட்டு, 37; என்பவரை கைது செய்து டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மணல் கடத்தியவர் கைது

திட்டக்குடி: ராமநத்தம் சப்இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரங்கியம் கைகாட்டி வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். டிராக்டர் டிப்பரில் பெரங்கியத்தைச்சேர்ந்த மாணிக்கம் மகன் சக்தி,28, என்பவர் மணல் எடுத்துச் சென்றது தெரிந்தது. அவரை கைது செய்து டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.வாகனம் மோதி முதியவர் பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் நேற்றிரவு 8:00 மணியளவில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் நீல கலர் ஜர்கின், நீல நிற பூ போட்ட கைலி அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X