தமிழ்நாடு

மேமாத்தூர் அணைக்கட்டு பராமரிக்காமல் அலட்சியம் : 5,400 ஏக்கருக்கு நீர் பாசனம் கேள்விக்குறி

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மேமாத்துார் அணைக்கட்டில் உள்ள ெஷட்டர்கள் பராமரிப்பின்றி, காட்டு வெள்ள நீர் ெஷட்டர்கள் வழியாக வீணாக வெளியேறுவதால் சுமார் 5400 ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது. அணைக்கட்டில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்றி தண்ணீர் தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேமாத்தூர் அணைக்கட்டு பராமரிக்காமல்  அலட்சியம் : 5,400 ஏக்கருக்கு நீர் பாசனம் கேள்விக்குறி

விருத்தாசலம்-பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மேமாத்துார் அணைக்கட்டில் உள்ள ெஷட்டர்கள் பராமரிப்பின்றி, காட்டு வெள்ள நீர் ெஷட்டர்கள் வழியாக வீணாக வெளியேறுவதால் சுமார் 5400 ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது.

அணைக்கட்டில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்றி தண்ணீர் தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை கோமுகி, மணிமுக்தா அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீர், நல்லுாரில் இணைந்து, மணிமுக்தாறாக கடலுார் மாவட்டத்தில் செல்கிறது. இதில், பாயும் மழைநீர் விருத்தாசலம் அடுத்த மேமாத்துார் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. 126.5 மில்லியன் கனஅடி கொள்ளளவுள்ள மேமாத்துார் அணைக்கட்டின் மூலம், கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, பரவளூர், தொரளூர், சாத்துக்கூடல், கோமங்கலம் உட்பட 15 கிராம ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.இதன் மூலம், 4,600 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், 800 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில தினங்களாக வேப்பூர் கூத்தக்குடி பகுதிகளில் பெய்த கனமழையினால், காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து மேமாத்துார் அணைக்கட்டுக்கு தண்ணீர் வருகிறது. பொதுப் பணித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், இந்த அணைக்கட்டில் உள்ள ஆறு ெஷட்டர்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால், அணைக்கு வரும் வெள்ள நீர் ெஷட்டர்கள் வழியாக வீணாக வெளியேறுகிறது.கடந்த 1962ல் கோமுகி அணை கட்டப்பட்ட போது, மேமாத்துார் அணைக்கட்டில் நீர் நிரம்பிய பின், கோமுகி அணையை நிரப்ப அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கோமுகி அணைக்கும் மேமாத்துார் அணைக்கட்டுக்கும் இடையே 11 அணைக்கட்டுகள் உள்ளன. இதனால், ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் கோமுகி அணையிலிருந்து வரும் நீர் மேமாத்துார் அணைக்கட்டுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில், கடந்த 2011 - 12ல் புதுப்பிக்கப்பட்ட மேமாத்துார் அணைக்கட்டு, தற்போது மணற் குவியல்களில் துார்ந்து போயுள்ளது.இதனால் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பெய்தால், விருத்தாசலத்தை சுற்றியுள்ள 15 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முடியாது.

மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழைநீரை கூட அணைக்கட்டில் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அணையில் அரை அடிக்கு கூட தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையில் மணல் குவியலாக குவிந்துள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன் மேமாத்துார் அணைக்கட்டில் குவிந்துள்ள மணல் குவியல்களை அகற்றி, தண்ணீர் தேக்கி வைக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X