பொது செய்தி

தமிழ்நாடு

தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கடலுார்,-கடலுார் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.கடலுார் மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இணைய வழியில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலிருந்து விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை

கடலுார்,-கடலுார் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.கடலுார் மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இணைய வழியில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலிருந்து விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் பேசுகையில், புரவி மற்றும் நிவர் புயலால் பாதித்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 2020--21-ம் ஆண்டுக்கான, நெல், உளுந்து பயறு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடத்தில் மூடப்பட்ட தனியார் சர்க்கரை ஆலையை திறந்து அரசே நடத்த வேண்டும். பருவ மழை துவங்குவதற்குள் வீராணம் ஏரியின் கிளை வாய்க்கால்களை துார்வார வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதேபோல் விவசாயிகள் பலர், சம்பா சாகுபடிக்கு தரமற்ற விதைகளை விற்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதில் கடலுார் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜானகிராமன், வேளாண் அலுவலர் தேன்மொழி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X