பொது செய்தி

தமிழ்நாடு

'அனைத்து கோவில்களிலும் விரைவில் குடமுழுக்கு'

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: 'விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அலுவலர்களுக்கு பணிச்சுமைகள் குறைக்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை தலைமையகத்தில், கோவில்கள் மேம்பாடு, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது. அதில், அமைச்சர்
கோவில், குடமுழுக்கு, சேகர்பாபு

சென்னை: 'விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அலுவலர்களுக்கு பணிச்சுமைகள் குறைக்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை தலைமையகத்தில், கோவில்கள் மேம்பாடு, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது. அதில், அமைச்சர் கூறியதாவது: அறநிலையத் துறை, இறைவனுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறை. கோவில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து, குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.


latest tamil newsஅர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்த வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அலுவலர்களுக்கு பணிச்சுமைகள் குறைக்கப்படும். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்களை பராமரித்து வருவாயை பெருக்க வேண்டும்.

கோவில் யானைகளுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை நடத்த வேண்டும். விழா காலங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில், யானைகளை இயற்கையான சூழ்நிலைகளில் வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swami Selvam - Tamilnadu,இந்தியா
28-ஆக-202118:53:36 IST Report Abuse
Swami Selvam சிலப்பதிகாரத்தில் சேரனுடைய அவைக்குப் பராசரன் என்ற அந்தணன் ஒருவன் வருகிறான். அவனைக் கூறுமிடத்து இளங்கோவடிகள் "நாவலம் கொண்டு நண்ணார் ஒட்டி பார்ப்பன வாகை சூடி" என்று கூறுகிறார். அதற்கு உரை எழுதிய அரும்பத உரையாசிரியர் "நா வலங் கொண்டு எனில் தருக்கம் சொல்லி நாவெற்றியை உடையோனாய்" என்று கூறுகிறார். "நா வலம் எனில் நா வெற்றி" என்கிறார். அவன் பெற்ற நா வெற்றியை "பார்ப்பன வாகை" என்றும் கூறுகிறார். புறநானூற்றில் விண்ணந் தாயனைக் குறிக்கும், முன்னர் கூறிய பாடல் "பார்ப்பன வாகை" என்னும் துறையைச் சாரும். புறப்பொருள் வெண்பாமாலை பார்ப்பன வாகை என்பதை "கேள்வியால் சிறப்பு எய்தியானை, வேள்வியால் விறல் மிகுத்தன்று" என்று கூறுகிறது. அறிவினால் சிறந்த ஒருவனை அவனது வேள்வி வெற்றியால் பாடுவது "பார்ப்பன வாகை" என்பது பொருள் இதே நூலில் பார்ப்பன வாகைக்கு எடுத்துக்காட்டு கூறுமிடத்து, ஓதங் கரைதவழ் நீர் வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்-ஏதங் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து "வேதம் கரைகண்ட ஒருவர் குற்றமற்ற தர்க்கச் சொல்லால் வெற்றி பெறுதல்" என்று பொருள் படும். ஆதலின் அறிஞர் பெறும் வெற்றி, குற்றமறத் தாம் எடுத்துச் சொல்லும் தத்துவ விளக்கங்களாலே பெறும் வெற்றியையே வெள்வி குறிக்கும். ஆதலின் "வேள்வி எடுத்து" என்பது ஞான வேள்வி என்று பொருள்படும். "களவேள்வி" போல ஆதலின் "பார்ப்பன வாகை" என்னும் இலக்கிய மரபு தருக்கத்தில் பெறும் வெற்றியையே குறிக்கும். சிலப்பதிகார அரும்பத உரை ஆசிரியர் "பார்ப்பன வாகை" என்பதை தருக்கஞ் சொல்லி பெறும் நாவெற்றியையே "பார்ப்பன வாகை" என்று குறிப்பிடுவதும் இதையே வலியுறுத்தும். புறநானூற்றில் உள்ள மற்றொரு பாடலான 305-ம் பாடலும் "பார்ப்பன வாகை" என்னும் துறையைச் சார்ந்தது. அதுவும் அந்தணன் ஒருவன் தன் நாவன்மையால் வெற்றி கொண்டு பெற்ற பரிசைக் கூறுகிறது. "வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்த்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே ஏணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யாணையு மணிகளைத் தனவே" பாட்டின் அடிக் குறிப்பில் "திணை-வாகை" என்றும், "துறை-பார்ப்பன வாகை" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமேகலையில் சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை பல்வேறு தத்துவங்களை எடுத்துரைப்பதைக் குறிக்கிறது. இதில் வைதிக மார்க்கத்து அளவைவாதி, சைவவாதி, பிரும்மவாதி, வைணவ-வாதி, வேதவாதி, ஆஜீவகவாதி எனப் பல சமயவாதிகள் குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் தத்தம் சமயங்களைத் தர்க்கசாத்திரத்தின் அடிப்படையில் எடுத்துரைப்பர் வாதம் செய்வர். ஆதலின் வாதிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களைச் சமயக்கணக்கர் என்றும் கூறுவர் இதையே கம்பர் தம் இராமகாதையில் "திகழ் கணக்காயர் கம்பலை" என்று கூறுகிறார். இவற்றிலிருந்து சங்க காலத்திலிருந்தே சமயங்களை அறிந்து கொள்ளத் தருக்க சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தனர் என்பது தெளிவாகிறது. தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சமய விவாதங்களை எடுத்து அலசி ஆராயப்படுமேயாயின் அச்சமயக் கருத்துக்கள் எந்த அளவுக்குச் சிறப்பெய்தியிருக்க வேண்டுமென்பதையும், எவ்வளவு காலம் அக்கருத்துக்கள் அவ்வுன்னத நிலையை அடைய முடியும் என்பதையும் ஆய்ந்தோமானால் தமிழகத்தில் சைவசமயம், கிறித்துவுக்குச் சில நூற்றாண்டுகளுக்கும் முன்னரே மிகச் சிறந்த சமயமாகத் திகழ்ந்திருக்கிறது என்பது புலப்படும். ஆதலின் புறப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள "ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்" என்பது "வேதங்களின் அடிப்படையில் அமைந்த சைவ ஆகமம்" என்பதே பொருந்தும். சைவ ஆகமங்களைச் சிவபெருமானே எடுத்துரைத்தார் என்று நமது ஆகமங்களும், தேவாரத் திருப்பதிகங்களும் எடுத்துரைக்கின்றன. நிமிர்சடை, முதுமுதல்வன் என்பது "சிவபெருமானே ஆகமங்களை எடுத்துரைத்தவர் என்னும் கருத்து சங்க காலத்திலேயே நிலைத்திருந்தது" என்பதைக் காட்டுகிறது. விண்ணந் தாயனின் முன்னோர்கள் சைவத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோ ராகிய புத்தர் முதலானவர்கள், மெய்போல் கூறிய பொய்யை எல்லாம் மாற்றிச் சைவம் தழைக்கச் செய்தவர்கள் என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் சைவ சமய வரலாற்றுக்கு இப்புறநானூற்றுப்பாடல் அரும் செய்தியை அளிக்கிறது.
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
29-ஆக-202108:52:58 IST Report Abuse
vivek c maniநன்று. அக்காலத்தமிழ் சிறப்பை விடுத்து இக்கால மாயாஜால தமிழை செந்தமிழ் என திரித்து தமிழ் சொந்தம் கொண்டாடும் 'தமிழ் வல்லுநர்கள்' அறிய வேண்டியது நற்தமிழ் உண்மையான தமிழ், மறையா தமிழ் பற்றுடையோர் இன்றும் உண்டு. அவர் நன்கே அறிவார், நலம் பயக்கும் தமிழும், தமிழ் வாழ வழி செய்த பெரியோர்களும் இன்று கேலி பொருளாக மாற்றப்படுவது வஞ்சகம் செய்யும் அரசியல் அன்றி வேறில்லை எனவென்று....
Rate this:
Cancel
Swami Selvam - Tamilnadu,இந்தியா
28-ஆக-202118:52:47 IST Report Abuse
Swami Selvam சங்க இலக்கியத்தில் சைவ ஆகமம் பல்வேறு சாத்திரங்களை அறிந்துகொள்வதற்கு அடிப்படையாக அமைவது தர்க்க சாஸ்திரம். இதை "அளவையியல்" என்றும் கொள்ளலாம். இது காண்டல், கருதல், கேள்வி என மூவகைப்படும். இதை வடநூலார் பிரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்று அழைப்பர். குறிப்பாகச் சமயத் தத்துவங்களை அறிந்துகொள்ள "அனுமானம்" என்னும் அளவையியல் மிக மிக இன்றியமையாதது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் "தருக்கம்" சங்க காலத்திலேயே மிக சிறப்பாக ஆராயப்பட்டிருந்தது என அறிகிறோம். சோணாட்டுப் பூஞ்சாற்றுப் பார்ப்பான் கௌளணியன் விண்ணந் தாயன் என்பவனைக் குறிக்கும் புறநானூற்றுப் பாடல் இதைக் கூறுகிறது. விண்ணந் தாயனின் முன்னோர்கள் பல்வேறு வேள்விகளைச் செய்தவர்கள் என்றும், சிறந்த அறிவாளிகள் என்றும் இப்பாடல் கூறுகிறது. "நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முது நூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய் ஓராது மெய் கொளீஇ மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரை சால் சிறப்பின் உரவோர் மருக" (உரை) "பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினை உடைய முதிய இறைவனது (சிவபெருமானது) வாக்கை விட்டு நீங்காது அறமொன்றையே மேவிய நான்கு கூற்றை யுடைத்தாய், ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட, ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோ ராகிய புத்தர் முதலாயின புறச்சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி அவரது மெய் போன்ற பொய்யை உளப்பட்டறிந்து அப்பொய்மையை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்ப சொல்லி, இருபத்தொரு வேள்வித் துறையையும், குறையின்றதாகச் செய்து முடிக்க புகழமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளானே" இப்பழையவுரையில் 21 வேள்வித்துறைகளையும் குறையில்லாமல் செய்து முடித்தவர்கள் என்று விண்ணந் தாயனது முன்னோர்கள் கூறப்பட்டுள்ளனர். "மூவேழ்துறையும் முட்டின்று போகிய" என்பதற்கு மேற்கண்டவாறு ஆசிரியர் உரை கூறுகிறார். "வேள்விகளில் 21 துறைகளைக் குறை ஏதுமின்றி செய்து முடித்தனர்" என்பது இதன் பொருளாகக் கொள்கிறார். ஆயினும் இதையே "மூவேழ்துறையும் என்பதற்கு 21 கூறுபட்ட தருக்கநூல் என்றும் அமையும்" என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இவர் இரண்டாவதாகக் கூறிய தருக்கநூல் என்ற பொருளே சிறப்பக நமக்குத் தோன்றுகிறது. மேலும் உரையாசிரியர் "ஒரு முதுநூல்" என்பதற்கு அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றை உடைய ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய "நூலாகிய வேதம்" என்று பொருள் கூறுகிறார். பாடலில், "ஒன்று புரிந்த ஈர் இரண்டின் ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்" என்று உள்ளது. இது நீண்ட சடையை உடைய சிவபெருமானால் கூறப்பட்டது என்பது பாடல். ஆதலின் நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும், அடிப்படையாகக்கொண்டு, சிவபெருமானால் கூறப்பட்ட நூலென்பது பொருள். இந்நூல் சைவ ஆகமமாகவே இருத்தல் வேண்டும். நான்கு வேதங்களிலிருந்தும், ஆறு அங்கங்களிலிருந்தும் பிறிதொன்று ஆன ஆகமம் என இதனால் அறியலாம். இப்பாடலுக்கு 200 ஆண்டுகளுக்குள் எழுந்த பெரும் காப்பியமான மணிமேகலையில் "சைவ வாதி" குறிக்கப்படுவதிலிருந்தும். இதை சிவபரமான நூல் என்று கொள்வதே பொருந்தும். ஆதலின் கிறித்துவாப்தத்தின் தொடக்கத்திலேயே சைவ சாஸ்திரங்களை அறிந்து கொள்ளத் தர்க்க சாஸ்திரத்தைப் பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம். இக்கருத்து வேறுபல சங்கப் பாடல்களிலிருந்தும் அறியப்படுகிறது. மலைபடுகடாத்தில் (அடி 112ல்) "வாதி கைஅன்ன சுவைக்கதிர் இறைஞ்சி" என்று குறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் இயற்றிய நச்சினார்கினியர் "பெரிய புனத்தில், எருமை கிடந்தாற் போன்ற கற்பெருத்த வழியிடத்திலே தருக்கம் கூறுகின்றவன் கையிடத்து இணைந்த விரல்களை ஒத்த, இரட்டித்த வரகுகள் கதிர்கள் முற்றி வளைந்து அரிவாளாலே அரிதல் உற்றன." என்று கூறுகிறார். ஆதலின் தருக்கம் கூறுகின்றவன் தனது கை விரல்களை அடிக்கடி பயன்படுத்திக் கணக்கிடுவான் என்பதை மலைபடுகடாம் "வாதி கையன்ன" என்ற தொடர் தெளிவாக உரைக்கின்றது. மதுரைக்காஞ்சியும் தருக்கம் அறிந்தோரைக் கூறுகிறது. அரசனுடைய நாளோலக்க இருக்கையில் எல்லாக் கலைகளையும் உணர்ந்தவர் குழுமியிருப்பர். அரசன் கேட்கத் தருக்கங்களைக் கூறி அளவளாவுவர். அது பெரும் ஆரவாரத்தைத் தோற்றுவிக்கும் என்பதை "விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப" என்று கூறுகிறது. (அடிகள் 525,526) இதற்கு உரை கூறுமிடத்தில் நச்சினார்க்கினியர் "எல்லாக் கலைகளையும் உணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்கத் தருக்கங்களைக் கூறி விரும்புதல் கொண்ட ஆரவாரம்" பல சமயத்தோரும் தம்மில் தாம் மாறுபட்டுக் கூறும் தருக்கத்தைச் சேரக் கூறக் கேட்டிருக்கும் கம்பலைப் போல" என்று கூறுகின்றார். ஆதலின் அரசன் அவையிலே தருக்க சாத்திரத்தை அறிந்த பல. பேர்கள் விவாதங்கள் புரிந்தனர் என்பது தெளிவு.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஆக-202117:23:33 IST Report Abuse
Pugazh V சிறப்பான நிர்வாகம். பாராட்டு க்குரிய நடவடிக்கை கள். இதுதான் ஆட்சித்திறன். நிர்வாகச் சிறப்பு. Good governance.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X