பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய பணியில் நூறு நாள் பணியாளர்கள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'நுாறு நாள் பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும்' என, ஆன்லைன் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கொரோனாவால் ஆன்லைனில் திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்தவாறு ஆன்லைன் வழியே விவசாயிகள் பிரச்னைகளை தெரியப்படுத்தினர்.கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., லதா, திட்ட

திண்டுக்கல் : 'நுாறு நாள் பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும்' என, ஆன்லைன் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கொரோனாவால் ஆன்லைனில் திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்தவாறு ஆன்லைன் வழியே விவசாயிகள் பிரச்னைகளை தெரியப்படுத்தினர்.கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., லதா, திட்ட இயக்குனர் தினேஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, நேர்முக உதவியாளர் ரவிபாரதி, தோட்டக்கலை துணை இயக்குனர் பாலமுருகன், செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.'ஊரக வளர்ச்சி துறை மூலம் நுாறு நாள் பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்க வேண்டும். வெங்காயத்திற்கு காப்பீடு பணம் பெற்றுத்தர வேண்டும். பட்டா மாறுதல் குளறுபடிகளை களைந்து விரைவாக வழங்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X