பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க விழிப்புணர்வு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். கொரோனாவால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிப்பதால் அவர்கள் தவறான பாதையில் சென்று விடாமல் தடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சாலை
 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். கொரோனாவால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிப்பதால் அவர்கள் தவறான பாதையில் சென்று விடாமல் தடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள் சாலை விதிகளை கடைபிடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்'' என்றார்.ஏ.டி.எஸ்.பி., லாவண்யா பேசியதாவது: ஆசிரியரும், பெற்றோரும் குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்' விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு கையாள்வது, போலீசாரிடம் புகாரளிப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். மாவட்ட கல்வி அலுவலர் அதிராமசுப்பு, திட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X