அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு முடிவு: சீமான் எதிர்ப்பு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை : 'பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: நாட்டு மக்களின் வியர்வையையும், ரத்தத்தையும் வரிப் பணமாக பெற்று உருவாக்கப்பட்ட, பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்க்கும், மத்திய அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீர்குலைத்து, அதை
Seeman,சீமான்,நாம் தமிழர் கட்சி

சென்னை : 'பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: நாட்டு மக்களின் வியர்வையையும், ரத்தத்தையும் வரிப் பணமாக பெற்று உருவாக்கப்பட்ட, பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்க்கும், மத்திய அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீர்குலைத்து, அதை சமப்படுத்த, பொதுத் துறை நிறுவனங்களை, தனியாருக்கு வழங்குவது, நாட்டின் எதிர்காலத்தை புதைகுழியில் தள்ளும் கொடுஞ்செயல்.


latest tamil news



வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை முழுதாக தனியாருக்கு விற்க, ஏற்கனவே முடிவு செய்துள்ள மத்திய அரசு, தற்போது மிச்சமுள்ள அரசு துறைகளையும் தனியாருக்கு விற்பது, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

நிதிநிலை சீரமைக்க, 6 லட்சம் கோடி ரூபாயை திரட்டும் நோக்கம் எனக்கூறி பெருமிதம் கொண்டாலும், இது, நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு தள்ளும் தற்கொலை முடிவு. எனவே, தனியாருக்கு குத்தகை விடும் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, சீமான் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-ஆக-202120:14:31 IST Report Abuse
Rajagopal இவரு வச்சிருக்கிற செல் போன் எந்த அரசாங்கம் செஞ்சது? இவரு ஓட்டுற மோட்டார் வாகனம் எந்த அரசாங்கம் செஞ்சது? இவரு போடுற சட்ட, பேண்ட்டு எந்த அரசாங்கம் செஞ்சது? இவரு ஊட்டுல இருக்குற டீவி, பிரிட்ஜ், கம்ப்யுட்டர் எல்லாம் எந்த அரசாங்கம் செஞ்சது? இவரு போடுற டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸாப், யூ ட்யூப்லாம் யாரு நடத்துறது? இவரு வளந்த சினிமாத்துற எந்த அரசாங்கம் வளத்தது? என்ன பேசுறோம்னு தெரியாம வாயில வந்தத பேசறானுக.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
29-ஆக-202110:16:12 IST Report Abuse
pradeesh parthasarathyஅதுக்காக உன் மனைவிக்கு நீ தானே கணவர் ... நீ வேலை சீயும் அமெரிக்கா நாட்டுக்காரன் உன் மனைவிக்கு கணவராக செயல்பட முடியுமா ...?...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-ஆக-202119:27:22 IST Report Abuse
Vijay D Ratnam ஹலோ சைமன் செபஸ்டியன், அறிவுஜீவிக்கும் அரைவேக்காடுக்கும் எங்களுக்கு வித்யாசம் தெரியும்ங்க. மைக்கு கிடைச்சா ஒங்க ரேஞ்சுக்கு பேசுங்க. சாக்கடைல தண்ணி நிக்குது, கொழாய்ல தண்ணி வரல, ஆமைக்கறி, அப்பத்தா, சுருக்குப்பைன்னு பெனாத்துறதோட நிறுத்திக்குங்க. தெரியாத விஷயத்தை பற்றியெல்லாம் புலம்பாதீங்க. ஒங்களுக்குத்தான் சிலோன்காரன் பிரபாகரன் பிஸ்னஸ் நல்ல போய்ட்டு இருக்குதுல்ல. ரெகுலர் காம்பெட்டிட்டர் வைகோ பிஸ்னஸ்லேர்ந்து பீல்ட் அவுட் ஆயிட்டாருல்ல. ஒருவேளை அந்த ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவித்த விவகாரத்தை மேடையில் பேசினால் விஜயலட்சுமி கேஸ்ல உள்ள போற நிலைமை ஆயிடுமோ.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஆக-202118:34:34 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஆமெக்கறியும் காறித்துப்பிடிச்சி ‼️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X