வேலை நிறுத்தம் செய்யும் வக்கீல்கள்; தடுக்க 'பார்' கவுன்சில் ஆலோசனை

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை குறைப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கவும், மீறுவோர் மீதான நடவடிக்கை குறித்தும், மாநில 'பார் கவுன்சில்'களுடன் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.உத்தரகண்ட் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், 35 ஆண்டுகளாக சனிக்கிழமை
lawyers, Bar Council, striking lawyers

புதுடில்லி: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை குறைப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கவும், மீறுவோர் மீதான நடவடிக்கை குறித்தும், மாநில 'பார் கவுன்சில்'களுடன் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உத்தரகண்ட் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், 35 ஆண்டுகளாக சனிக்கிழமை தோறும் நீதிமன்றங்களுக்கு வருவதில்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி போராட்டம் அறிவித்து நீதிமன்ற பணியை புறக்கணிக்கின்றனர்.


கவலை:


பாகிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு, நேபாளத்தில் நிலநடுக்கம், வழக்கறிஞரின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் போன்ற ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்கு வர விரும்புவோரையும் வரவிடாமல் தடுக்கின்றனர்.

இது குறித்து, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இதுபோன்ற வேலை நிறுத்தங்களை தவிர்ப்பது குறித்து இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சில்கள் தங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க உத்தரவிட்டது. பரிந்துரைகள் எதுவும் வராததை அடுத்து, இந்திய பார் கவுன்சில் தலைவர் என்ற முறையில் மனன் குமார் மிஸ்ராவை நீதிமன்றத்துக்கு உதவும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news
ஏற்பாடு:


இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனன் குமார் மிஸ்ரா கூறியதாவது: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்வதை குறைக்கவும், மீறி அதை செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், விரிவான விதிமுறைகளை வகுக்க, அனைத்து மாநில பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்துக்கு அடுத்த மாதம் 4ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202111:31:00 IST Report Abuse
Vittal anand rao. நீதி நாடுவோர் தாமாக தமது வளக்கட வேண்டும். இந்த கருத்து கோட்டு கல் வருமானம் டில்லால் தவில்க வேண்டும்.
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
28-ஆக-202110:49:07 IST Report Abuse
Subramaniyam Veeranathan மக்கள் நீதிவேண்டி ஒருமுறை கோர்ட் வாசலை மிதித்தால்போதும் பலவருடங்களுக்கு அல்லது வாழ்நாள்முழுவதும் இவர்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். இவர்கள் சட்டத்தை மட்டுமே பாதுகாப்பவர்கள்......
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
28-ஆக-202109:49:21 IST Report Abuse
SUBBU இந்தியாவில் உள்ள வக்கீல்கள் எல்லாம் தலையில் கொம்பு முளைத்தவன்கள் அவன்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அதிலும் தமிழ்நாட்டில் உள்ள திமுக வழக்கறிஞர்கள் இருக்கான்களே அவர்கள் (அ) நீதியை நிலைநாட்டுவதை அந்த கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X