நீரை காய்ச்சி குடிங்க...!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீரை காய்ச்சி குடிங்க...!

Added : ஆக 28, 2021
Share
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றிலிருந்து, நாளொன்றுக்கு, 90 லட்சம் லிட்டர் நீர் எடுத்து, அதை சுத்திகரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் வழிந்தோடுகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''பவானி ஆற்றில்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றிலிருந்து, நாளொன்றுக்கு, 90 லட்சம் லிட்டர் நீர் எடுத்து, அதை சுத்திகரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் வழிந்தோடுகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''பவானி ஆற்றில் செந்நிறத்தில் நீர் வருகிறது. இந்த நீரை பம்பிங் செய்து சுத்தம் செய்தாலும், ஓரளவு மட்டுமே நிறம் மாறுகிறது. அந்த நீர் தான் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதை அப்படியே குடித்தால், சளி, காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள், நீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின் குடிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X