பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் காட்டம் : ஒன்றா... இரண்டா...! நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
அன்னுார்:இணைய வழியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.அன்னுார் வட்டார வேளாண் அலுவலகத்தில், இணைய வழியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா மற்றும் வேளாண் அலுவலர்கள்
 குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் காட்டம் : ஒன்றா... இரண்டா...! நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

அன்னுார்:இணைய வழியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.அன்னுார் வட்டார வேளாண் அலுவலகத்தில், இணைய வழியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா மற்றும் வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.விவசாயி ரங்கசாமி: தோட்டக்கலை துறை இலவசமாக வழங்கும் ஜி 9 ரக திசு வாழை கன்றுகளை விவசாயிகள் விரும்புவதில்லை. நேந்திரன் திசு வாழை கன்றுகளை வழங்க வேண்டும்.விவசாயி அங்கமுத்து: ஆலாம்பாளையம், குமாரபாளையம் விவசாயிகள், கடந்தாண்டு வாழை சேதம் அடைந்த போது காப்பீடு தொகைக்கு விண்ணப்பித்து 10 மாதங்கள் ஆகிவிட்டது. தோட்டக்கலை, வருவாய் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்தும், இதுவரை தொகை வழங்கவில்லை. கடந்த பிப்., முதல் மே மாதம் வரை விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக பெரும்பாலான நேரங்களில் இருமுனை மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இதனால் கிணற்று மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மயில்சாமி: அன்னுார் வாரசந்தை, கோவில் மற்றும் டாஸ்மாக் கடை முன், சாலையோரத்தில் சுகாதாரம் இல்லாமல் நடக்கிறது. இதை தனியாக சுகாதாரமான இடத்தில் நடத்த வேண்டும்.குன்னத்துார் மற்றும் நாரணாபுரம் விவசாயிகள் பேசுகையில், 'பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால் மாதக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர்' என்றனர்.விவசாயி சென்னியப்பன்: அல்லப்பாளையம் ஊராட்சியில் கொசவன் பாறை குட்டையில் கிராவல் மண், லோடு கணக்கில் கடத்துகின்றனர். இதுகுறித்து தாசில்தார் மற்றும் கனிமவள துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கஞ்சப்பள்ளி ஊராட்சியில் கஸ்தூரி குட்டையில் தடுப்பு அணை கட்டினால் அதிகளவில் மழைநீர் தேங்கும்.விவசாயி கணேசன்: கோபிராசிபுரம் விவசாயி கோபால்சாமி மீது எந்த தவறும் இல்லை என வீடியோவில் தெரிய வந்த பிறகும், அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை. மாவட்ட வருவாய் அதிகாரி முன், பொய் வாக்குமூலம் அளித்த வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் மீது சாதாரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது விவசாயிகளை வேதனைப்பட செய்துள்ளது. போலி பத்திரிகையாளர் இதுவரை கைது செய்யப்படவில்லை.கலெக்டர் சமீரன் அளித்த பதில்: வருவாய்த்துறை அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தற்காலிக பணி நீக்கம், நிரந்தர பணி நீக்கம் அல்லது பதவி உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கு, அதற்கான குழு முன் விசாரிக்கப்பட்ட பின் முடிக்கப்பட்டு விடும். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து எந்த முறையீடு ஆனாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.விவசாயிகள் பலர் நில அளவைத்துறை மீது புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X