பொது செய்தி

தமிழ்நாடு

அதற்கு பதில் இப்படி யோசிக்கலாம்...! எம்.பி., ராஜாவிடம் விவசாயிகள் மனு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
அன்னுார்;புதிய புறவழிச்சாலைக்கு பதில், ஏற்கனவே உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய எம்.பி., ராஜாவிடம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு தரப்பட்டது.அன்னுார், கோவில்பாளையம் பேரூராட்சிகள் மற்றும் ஆறு ஊராட்சிகளின் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், நீலகிரி எம்.பி., ராஜாவிடம் அளித்த கோரிக்கை மனு:திண்டுக்கல்- - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்,

அன்னுார்;புதிய புறவழிச்சாலைக்கு பதில், ஏற்கனவே உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய எம்.பி., ராஜாவிடம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு தரப்பட்டது.அன்னுார், கோவில்பாளையம் பேரூராட்சிகள் மற்றும் ஆறு ஊராட்சிகளின் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், நீலகிரி எம்.பி., ராஜாவிடம் அளித்த கோரிக்கை மனு:திண்டுக்கல்- - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், குரும்பபாளையத்தில் துவங்கி அன்னுார், புளியம்பட்டி வழியாக, கர்நாடக எல்லை வரை புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவக்கியுள்ளது. இந்த வழித்தடம் அமையும் பட்சத்தில் அதிகளவில் விவசாய நிலம், திறந்தவெளி கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடு, வீட்டுமனைகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கும். பல இடங்களில், விவசாய பூமிகள் துண்டுதுண்டாக பிரிந்து விடும். விவசாய உற்பத்தி இழப்பு ஏற்படும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.பல கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் வீடுகளின் அரசு மதிப்பு மிக குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டு பேரூராட்சி, ஏழு ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதற்கு பதில், அன்னுார், கணேசபுரம், மற்றும் கோவில்பாளையத்தில் மேல்நிலை பாலங்கள் அமைக்கலாம். மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அரசு நிலங்களை பயன்படுத்தியும் நான்குவழி சாலைகள் அமைக்கலாம். இந்த புதிய புறவழிச்சாலை திட்டத்தை தயாரித்த தனியார் நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய 'கூகுள் எர்த்' செயலியின் வரைபடத்தைப் பயன்படுத்தி திட்டத்தை தயாரித்துள்ளது.இந்த மூன்று வருடத்தில் அதிக அளவில் மனைப்பிரிவு, குடியிருப்பு, தொழில் நிறுவனங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, வேறு நிறுவனம் வாயிலாக புதிய தொழில்நுட்பங்களை வைத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். சாலை விரிவாக்கத் திட்டத்தை வேண்டாம் என்று நாங்கள் மறுக்கவில்லை.இந்த நல்ல திட்டத்தை, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதன் வாயிலாக விவசாய நிலங்கள் பல நுாறு குடியிருப்புகள் பாதிப்பதை தடுக்கலாம்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்மனுவை பெற்ற எம்.பி., ராஜா, ''இது மத்திய அரசின் திட்டம். என்னால் முடிந்தளவு முயற்சி செய்கிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X