பொது செய்தி

தமிழ்நாடு

வசூலித்த கட்டணத்தில் வளர்ச்சி பணிகள்: ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மனு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சூலுார்:'அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த மக்களிடம்வசூலிக்கப்பட்டகட்டண தொகையில், அந்தந்த ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,' என, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் இணைந்து, கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பை துவக்கியுள்ளனர். கூட்டமைப்பின்

சூலுார்:'அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த மக்களிடம்வசூலிக்கப்பட்டகட்டண தொகையில், அந்தந்த ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,' என, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் இணைந்து, கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பை துவக்கியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் வேலுசாமி மற்றும் நிர்வாகிகள், கோவை கலெக்டர் சமீரனிடம் அளித்த மனு:சூலுார் ஒன்றியம், கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ளது. மாநகருக்கு இணையாக, சூலுார் ஊராட்சி பகுதிகள் வளர்ந்து வருகின்றன. ஒரே ஒரு ஊராட்சி செயலரால் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணமுடியாது. ஊராட்சி தலைவர்களுக்கு உதவியாக தன்னார்வலர்கள் செயல்படுகின்றனர். வெளியாட்கள் உள்ளே இருக்கக்கூடாது, என, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். இதனால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் பொதுமக்கள்அவதிக்குள்ளாகியுள்ளனர். அதனால், தன்னார்வலர்களை பணியமர்த்தவும், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க அனுமதிக்க வேண்டும்.வரி வசூல் செய்யவும், கம்ப்யூட்டர் இயக்கவும் உதவியாளர்களை பணியமர்த்தி, அவர்களுக்கு தொகுப்பூதியம் அல்லது தினக்கூலி வழங்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் வினியோகம் செய்ய கூடுதல் பணியாளர்கள், சுகாதார பணிகளை மேற்கொள்ள, கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, மீண்டும் பணி வழங்க வேண்டும்.ஊராட்சிகளில் அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்த, வசூலிக்கப்பட்ட தொகையை கொண்டு, அந்தந்த ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X