பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் சாகுபடியில் காப்பீடு அவசியம்! சிறப்பு திட்டத்தில் வேளாண் துறை அழைப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
உடுமலை;இயற்கை இடர்பாடுகளால், விவசாய சாகுபடியில், ஏற்படும் இழப்புகளை தவிர்க்க, நடப்பு காரிப் பருவத்தில், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், காப்பீடு செய்ய, உடுமலை வட்டார வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.பயிர் காப்பீட்டுத்திட்டம், மத்திய, மாநில அரசு சார்பில், செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு காப்பீடு திட்டத்தில், உள்ள நடைமுறை

உடுமலை;இயற்கை இடர்பாடுகளால், விவசாய சாகுபடியில், ஏற்படும் இழப்புகளை தவிர்க்க, நடப்பு காரிப் பருவத்தில், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், காப்பீடு செய்ய, உடுமலை வட்டார வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.பயிர் காப்பீட்டுத்திட்டம், மத்திய, மாநில அரசு சார்பில், செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு காப்பீடு திட்டத்தில், உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண, கலெக்டர் தலைமையிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில், பயிர்களை காப்பீடு செய்ய, பரிந்துரை வழங்கியுள்ளது.அதன்படி, மக்காச்சோளம், நிலக்கடலை, சோளம், பருத்தி, தக்காளி, வெங்காயம் ஆகிய சாகுபடிகளுக்கு, பயிர் காப்பீடு பிரிமீயம், செலுத்த, வரும், 31ம் தேதி கடைசி தேதியாகும்.மக்காச்சோளம் ஏக்கருக்கு, 610 ரூபாய் விவசாயிகள் பங்குத்தொகையாக, செலுத்த வேண்டும். நிலக்கடலை, 589 ரூபாய்; சோளம், 86 ரூபாய், பருத்தி 516 ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். வேளாண் துறை வாயிலாக, நடப்பு சீசனில், குறிச்சிக்கோட்டை உள்வட்டத்தில், மக்காச்சோளம் காப்பீடு செய்ய, 610.58 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெரிய வாளவாடி உள்வட்டத்துக்குட்பட்ட, நிலக்கடலை 589.84 ஏக்கர்; உடுமலை உள்வட்டத்தில், சோளம் சாகுபடிக்கு, 86.92 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிதி உதவிவேளாண்துறையினர் கூறியதாவது:திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், இயற்கை இடர்பாடுகளால், இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.நிலையான வருமானம் கிடைக்கச்செய்து, அவர்களை விவசாயத்தில், நிலை பெற செய்தல்; நவீன வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க, ஊக்குவித்தல்; உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன், உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.விதைப்பை தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலையில் வழங்கப்படும்.அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற, உள்ளூர் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்புக்கு பயிர் காப்பீடு வழங்கப்படும்.எனவே, விவசாயிகள், நடப்பு சீசனில், தவறாமல், பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X